மஹிந்த ராஜபக்ஷவின் பிரசன்னம் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும்
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது கட்சியை பாரியளவில் பலப்படுத்துவதாக அமை யும் என்று நான் கருதுகிறேன் என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த இடத்தில் நான் பிரதமர் வேட்பாளர் என்ற விடயத்தை வைத்து பேசவில்லை. மாறாக மஹிந்த ராஜபக் ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் செயற்பாட்டு ரீதியாக பங்கெடுத்து செயற்படுவது கட்சியை பலப்படுத்தும். மாறாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதா? இல்லையா என்பதனை கட்சியே தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பி்டுகையில்,
நுகேகொடை யில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தாலும் மக்கள் மனதிலிருந்து அவர் இன் னும் நீங்கவில்லை. இந்த விடயம் நன்றாகவே தெளிவாகின்றது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்வரும் பொதுத் தேர் தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கவேண்டும் என்பது தொடர்பில் விடுக்கப்படும் கோரி க்கைக்கு நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியினால் எடுக்கப்படவேண்டிய தீர்மானமாகும். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டால் நான் சுதந்திரக் கட்சி யின் உறுப்பினர் என்ற வகையில் அதனை எதிர்க்கமாட்டேன்.
ஆனாலும் எனது தனிப்பட்ட கருத்து இங்கு முக்கியமல்ல. கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்தவும் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். ஆனால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவேண்டும். அதாவது நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது கட்சியை பாரியளவில் பலப்படுத்துவதாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
பிரதமர் பதவி அவருக்கு வழங் கப்படவேண்டும் என்று நான் கூறவில்லை. அவ்வாறு நான் கூற முடியாது. அது கட்சியினால் கூட்டாக எடுக்கப்படவேண்டிய தீர்மானம். ஆனால் மஹிந்த ராஜ பக் ஷவின் பிரசன்னம் சுதந் திரக் கட்சியை பாரியளவில் பலப்படுத்தும் என்பதனை தெரி விக்கின்றேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply