நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த நகரை ராணுவம் மீட்டது

நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் போகோஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அங்கு 13 ஆயிரம் பொது மக்களை கொன்று குவித்துள்ளனர். இவர்களின் அட்டூழியம் குறையவில்லை. நைஜீரியாவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தற்போது நைஜீரியாவின் போர்னோ மாகாண எல்லையில் உள்ள கேமரூன், சாட், நைஜர் ஆகிய நாடுகளிலும் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நைஜீரியாவுக்கு உதவ முன் வந்துள்ளன.கடந்த வாரம் சாட் நாட்டில் அமெரிக்கா ராணுவ பயிற்சி அளித்தது. அதில் 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

நைஜீரியாவின் பாகா நகரில் பன்னாட்டு ராணுவ தளம் உள்ளது. இந்த நகரை கடந்த ஜனவரி 3–ந்தேதி போகோஹாரம் தீவிரவாதிகள் கைப்பற்றினர். எனவே அந்த நகரை மீட்க கடந்த 5 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் தீவிரவாதிகளின் நிலைகள் தீயில் எரிந்து அழிந்தன. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முடிவில் பாகா நகரை ராணுவம் மீட்டது. இந்த தகவலை நைஜீரிய ராணுவம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் குண்டு வீச்சு நடத்தி மாங்குனோ நகரை மீட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply