இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு சாத்தியப்படாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு சாத்தியப்படாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட், விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 
 
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதை விடுத்து அரசியல் ரீதியாக அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வுகாண முடியாது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், நியாயமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு, இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என காரட் கூறினார்.

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. எனினும், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் தீர்வொன்று அவசியம். இதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு, இந்திய மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply