வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் இலண்டன் வாழ் இலங்கையர் மத்தியில் ஜனாதிபதி

புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து இலங்கை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பினை முழுமையாக நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் வாழ் இலங்கையர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவதோடு இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, பயம், சந்தேகத்தை இல்லாதொழித்து அமைதியான யுகத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளது என்றும் குறிப்பிட்டு ள்ளார். பிரிட்டிஷ¤க்கான நான்கு நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலண்டனில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை எவ்வகையிலும் சிதைக்கப் போதில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டன் வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகத்தான வரவேற்பளித்ததுடன் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிக் கெளரவித்தனர். அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த “சபோட் மைத்திரி யூ.கே” அமைப்பின் ஐ.தே.க. ஆதரவுக் குழுவினரும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க மாற்றமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய லண்டன் வாழ் இலங்கையர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் எதிர்கால செயற் பாடுகளிலும் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவர் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

“சபோட் மைத்திரி யு.கே.” அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஹெல உறுமய’ “மக்கள் விடுதலை முன்னணி” உறுப் பினர்கள் பலரும் லண்டனில் ஜனாதிபதி யைச் சந்தித்துக் கலந்துரைய ¡டியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் லண்டன் கிளை பழைய மாணவர்களும் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர். அனைத்து சமூகங்களுக்கிடையிலும் அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி மேற்கொண்டுள்ள செயற் பாடுகளை அவர்கள் பாராட்டினர்.

அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியைக் கெளரவிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர். லண்டனில் வாழும் இந்து பெளத்தம், இஸ்லாம், உள்ளிட்ட மதத்தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதுடன் தத்தமது சமய வழிபாடுகளை மேற்கொண்டு அவருக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வை பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். அவ்விடத்துக்கு நேரில் சென்ற ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ வாகனத்திலிருந்து இறங்கி ஆர்ப்பாட்டத் திலீடுபட்டவர்களை நோக்கி கைகளை அசைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply