என்னிடம் ஸ்மார்ட்போன் கூட இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எப்போதுமே எஸ்எம்எஸ்களை அனுப்புவதில்லையாம், எப்போதாவது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்வாராம், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ரெக்கார்டிங் வசதி கொண்ட செல்பேசியைக் கூட பயன்படுத்துவதில்லையாம். நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த ஒபாமா, நான் டிவிட்டரில் அடிக்கடி பதிவு செய்து கொண்டிருக்கும் பழக்கம் இல்லாதவன் என்றார்.மேலும், எந்த எஸ்எம்எஸ்களையும் அனுப்ப மாட்டேன், இப்போதும் மின்னஞ்சலையே பயன்படுத்துகிறேன். என்னிடம் பிளாக்பெர்ரி போன் மட்டுமே உள்ளது என்றார்.
என்னுடைய மகள்கள் ஸ்மார்ட் போன்கள் வைத்துள்ளனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நவீன தொழில்நுட்பங்கள் கூடிய போன்களை நான் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply