கண்ணீரை வரவழைக்கின்றது : யாழில் மோடி உருக்கம்
இலங்கைக்கான இரண்டு நாள் பயணத்தின் இறுதிநிகழ்வான இந்த நிகழ்வு எனக்கு கண்ணீரை வரவழைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய தனது விஜயத்தின் இறுதி நிகழ்வாக இளவாலை வடமேற்கு கூவில் கிராமத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தை கையளிக் கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே,
அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடிக்கு யாழ்ப்பாணத்தில் வாழை தோரணங்களை நாட்டி மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீதியின் இரு மருங்கிலும் இலங்கை இந்திய கொடிகளை அசைத்து மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்த வண்ணம் சென்றார்.
இறுதியாக இளவாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் உருக்கமாக தனது உரையை ஆரம்பித்தார். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கையளித்தார். அங்கு பிரதமர் தொடர்ந்து பேசுகையில்,
யாழ்ப்பாண மக்களுடைய வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் சுகம் நிறைந்ததாக அமைவதுடன் இலங்கை மக்களுடைய வாழ்க்கை பாதுகாப்புடன் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.
இந் நிகழ்வு எனது இறுதி நிகழ்வாக உள்ளது. இலங்கைக்கான இரண்டுநாள் பயணத்தின் நான் கலந்துகொண்ட நிகழ்வில் இது கண்ணீர் வரவழைத்த நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தை கையளிப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு நாம் திறந்த வானத்தின் கீழ் வாழ்கின்றோம். இது மிகவும் கஷ்டமான நிலைமையாகும் உண்மையில் இந்த வீட்டு அமைப்பானது குஜராத்தில் பூகம்பம் வந்தபோதும் இலங்கையில் சுனாமி வந்தபோதும் இந்தவகையான வீட்டுத்திட்டங்களையே அமைத்திருந்தோம். 50ஆயிரம் வீடுகளில் 27 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்திருக்கிறோம்.
இந்த இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த புதிய வீட்டுத்திட்டத்தை ஒப்படைக்கும்போது இந்த வீட்டின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் அந்த சிறுவனிடம் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய் எனக் கேட்டபோது ஆசிரியராக வரவேண்டும் என்றான். ஆகவே சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன் .
மேலும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும். இவ் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி சுமார் 4ஆயிரம் வீடுகள் மத்திய ஊவாவில் அமைத்துக்கொடுக்கப்படும். இளவாலையில் 361 வீடுகள் அமைக்கப்படவுள்ளன இதில் 12 வீடுகளுக்கான உறுதிப் பத்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில ஈடுபட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply