தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: சவுதியில் அமெரிக்க தூதரகம் மூடல்
சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தால் இரண்டு நாட்களுக்கு அவை மூடப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சவுதியின் தலைநகர் ரியாத், ஜித்தா மற்றும் தரான் உள்ள அனைத்து தூதரகங்களையும் இன்றும் நாளையும் (ஞாயிறு மற்றும் திங்கள்) இரு நாட்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக செயல்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.மேலும் அந்நாட்டில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படியும், பொது இடங்களுக்கு செல்வதை முடிந்த அளவு தவிர்க்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சவுதி, அமெரிக்காவுடன் சேர்ந்து விமான தாக்குதலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் முதல் அந்நாட்டில் நான்கு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று உள்ளது.
கடந்த மாதம் சவுதியில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆயில் நிறுவனத்தில் வேலைப் பார்த்த இரண்டு அமெரிக்கர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply