இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீர் மாநில இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜம்மு மாவட்டத்தில் ஆர் எஸ் புரா பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினர். சுமார் 5 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்திய அவர்கள் பின்னர் அங்கிருந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. தாக்குதலில் எந்த உயிரிழப்பும், சேதமும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply