இந்தியா, இலங்கை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் ஆகிய நான்கு தரப்புக்களும் இணைந்து பேச்சுவார்த்தை!:சீ.வி.விக்னேஸ்வரன்
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, நான்கு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருடன் நேற்று நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்டகாலமாக தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே இருக்கிறது.
கடந்த கால அரசாங்கங்கள் அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்யும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்களை கணக்கில் எடுக்காது விட்டுள்ளனர்.
தற்போது இந்த பிரச்சினையை தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் இந்தியா, இலங்கை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் ஆகிய நான்கு தரப்புக்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கான தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply