இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய விபத்தொன்றில் படுகாயமடைந்தார்

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, விபத்தொன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் இடறி விழுந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக சுனந்த தேசப்பிரிய இணையத்தளமொன்றிடம் தெரிவித்துள்ளார். விபத்தால் முதுகின் கீழ் பகுதியில் பலமான அடி பட்டுள்ளதாகவும், 1995ம் ஆண்டு இலங்கை பெந்தர பகுதியில் இனவாதிகள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் முள்ளந்தண்டு பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்ததில்,அந்த இடத்தில் தற்போது அந்த வலி உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வௌிநாட்டு வாழ்க்கைக்கு விடைகொடுத்து, எதிர்வரும் 27ம் திகதி தான் நாடு திரும்பவிருந்த நிலையில், பூரண குணமடையும்வரை நடக்க வேண்டாம் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதால் தனது இலங்கை பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply