அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம்: ரஷ்ய அதிபர் புதின் அதிர்ச்சி தகவல்

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று புதின் பேசும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவர், “கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் சரியாக சொல்ல முடியவில்லை. எனவே ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுயிருந்தேன்” என்று கூறினார்.

அப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்தீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு “ஆமாம். தேவை ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருக்கும்படி உத்தரவு போட்டிருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply