புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டங்கள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் பெறும் வழிகளை கட்டியெழுப்பி அவர்களுக்கு பாதுகாப்புமிக்க பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக வாழ்வாதார வேலைத் திட்டங்களை அறிமுகம் செய்வதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அதற்காக விரிவான வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு புனர்வாழ்வு, இளைஞர் அலுவல்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியக உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
புனர்வாழ்வு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2015 மார் 03ம் திகதி அலரிமாளிகை யில் நடைபெற்ற இவ் விசேட கலந்துரையாடலின் போது, தற்போது வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 49 எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பது தெரியவந்தது.
இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா போன்ற அமைச்சர்களும் மீள் குடியேற்ற அமைச் சின் செயலாளர், இராணுவ அதிகா ரிகள் புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகம், இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் போன்ற அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண் டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply