ராஜபக்சே ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பற்றி ரணில்
இலங்கையில், ராஜபக்சே ஆட்சியில் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம், விரைவில் மக்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு அருகே தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை தண்டிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். எனினும், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அர்த்தம் கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர் ரணில், அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தேசிய அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இலங்கையில் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply