எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை :அத்து­ர­லியே ரத்ன தேரர்

தமிழ் மக்­க­ளுக்கு நாங்கள் ஒரு­போதும் எதி­ரா­ன­வர்கள் அல்லர். பயங்­க­ர­வா­த­மா­னது எம் இரு சமு­தா­யத்­தி­ன­ரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்­ற­தா­லேயே அதனை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு நாம் முயற்­சித்தோம். பௌத்த பிக்­குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமி­ழ­ருக்­கெ­தி­ரான மனோ­நிலை இருந்­த­தில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளு­மன்ற உறுப்­பினருமான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார்.யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில்  இடம்­பெற்ற சிங்­கள பௌத்த கலா­சார விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில்,

வடக்கு யுத்­தத்தில் தமிழ் மக்கள் பெரு­ம­ளவு துய­ரத்­துக்­குள்­ளா­னார்கள். சிங்­கள மக்­களின் விகி­தா­சார அடிப்­ப­டையில் தமிழ் மக்­களின் இழப்பு அதிகம். தமிழ்ச் சமு­தாயம் கடந்த தசாப்­தத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக போர் புரி­வ­தா­கவே நினைத்­தது. தமிழ், சிங்­கள சமு­தா­யங்கள் மிகத் தெளி­வாகப் பார்க்­க­வில்லை. தமிழ், சிங்­கள அர­சி­யல்­வா­தி­களின் பிழை­யான அர­சியல் கொள்­கையே இந்த சமூகக் கிளர்ச்­சிக்கு அடிப்­ப­டை­யா­னது.

யாழ்ப்­பாண நூலகம் எரிக்­கப்­பட்­டமை அர­சி­யல்­வா­தி­களின் தனிப்­பட்ட நோக்­கத்தின் அடிப்­ப­டை யில் ஆகும். சிங்­க­ள­வர்­களின் எதிரி தமி­ழர்­களோ தமி­ழர்­களின் எதிரி சிங்­க­ள­வர்­களோ இல்லை.  வடக்­கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த யுத்தம் இந்­த­ள­வுக்கு வீரி­ய­ம­டை­வ­தற்கு காரணம் வெளி­நாட்­ட­வர்­களின் தலை­யீ­டாகும்.  எமது அர­சியல் தலை­வர்கள் பிழை­யான வெளி­நாட்டுக் கொள்­கை­களை பின்­பற்­றினர். நாங்கள் அமெ­ரிக்­கர்­களில் தங்­கி­யி­ருந்த வேளை இந்­தியா சோவியத் தேசத்தின் பாதையில் சிந்­தித்­தது. சோவியத் தேசம் இன்று இல்­லா­த­தனால் உலகச் சந்தை தொடர்பில் இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் போட்டி இடம்பெ­று­கின்­றது.

நாங்கள் பொம்­ம­லாட்­டக்­கா­ரர்­க­ளாக இருப்­பதால் விப­ரீ­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.  விவ­சாயப் பொருட்­களில் இர­சா­யன பாவ­னையால் ரஜ­ரட்ட பிர­தேசத்தின் நீர் உவர்­நீ­ராக மாற்­ற­ம­டைந்து அங்கு சிறு­நீ­ரக நோய் பர­வி­யுள்­ளது.

ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் மர­ணத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இவ்­வா­றான நிலையில் வட­மா­காண சபை இர­சா­ய­ன­மற்ற விவ­சாயக் கொள்­கை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­தலாம்.

யாழ்ப்­பாணம் எதிர்­கா­லத்தில் கடல் ­நீ­ருக்குள் மூழ்கும் அபாயம் உள்­ளது. அதி­க­ப்ப­டி­யான காப­னீ­ரொட்­சைட்டு வாயு கார­ண­மாக கடல்­நீர்­மட்டம் அதி­க­ரிக்­கின்­றது. ஐக்­கிய நாடுகள் சபை இது தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இலங்கை சூழல் ரீதி­யாக அழி­வ­டை­யாத நாடு. அதனை பாது­காக்­க­வேண்டும்.  மது, போதைப்­பொருள் பாவனை, விப­சாரம் என்­பன தமிழ், சிங்­கள சமூ­கத்தில் அதி­க­ரித்­துள்­ளது. இவற்றிலிருந்து சமுதாயத்தை மீட்டெ டுக்கவேண்டும். எமது நாடு தற்போது பெரும் கலாசாரச் சீரழிவுகளை எதிர்நோக் கியுள்ளது. கொழும்பிலிருந்து போதைப் பொருள் பாவனை தற்போது வடக்குக்கும் பரவி வருகின்றது. வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி எமது கலாசாரங்களை பாது காக்க குரல் கொடுக்கவேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply