பாகிஸ்தானில் பாதுகாப்புக் குறைபாடு இருக்கவில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர்
பாதுகாப்பில் குறைபாடு இருந்தமை லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமாக அமையவில்லையென பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த தடவை இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாது என அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
“எமது நாட்டுக்கு வரும் எந்தவொரு அணிக்கும் பிராந்திய மற்றும் மத்திய பாதுகாப்புத் தரப்பினரின் இணைந்த பாதுகாப்பு வழங்கப்படும். அணிகளுக்கு உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவார்கள்” என பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் பிர் அஃவ்டப் குசைன் ஷா ஜிலானி கூறியுள்ளார்.
பாதுகாப்பில் குறைபாடு இருந்தமையே இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தக் காரணமாக அமைந்தது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கேட்டபோது, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் நிலையில் தான் இல்லையெனவும், மாகாணங்களின் பாதுகாப்பை அந்தந்த மாகாணங்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்திருப்பதுடன், எதிர்வரும் 9 மாதங்களில் சர்வதேச போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த எதிர்பார்த்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் தலைவர் கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும்வரை சர்வதேச கிரிக்கட் அணிகளை பாகிஸ்தானுக்கு அழைக்கப்போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் கிளயர் மக் காஸ்சில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மும்பையில் நவம்பர் 26ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply