ஈராக்கில் 4 அரசு படை வீரர்களின் தலையை துண்டித்த தீவிரவாதிகள்

சிரியா மற்றும் ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்து பகிரங்க மிரட்டல் எச்சரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளின் தலைகளை கொடூரமாக துண்டித்து படுகொலை செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஈராக்கில் அரசு ஆதரவு படை வீரர்களின் தலைகளையும் துண்டித்துள்ளனர்.அதுபற்றிய வீடியோவையும் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஈராக் அரசு ஆதரவு படையை சேர்ந்த 4 வீரர்கள் கறுப்பு நிற உடை அணிந்து முழங்காலில் மண்டியிட்ட நிலையில் உள்ளனர். அவர்களின் பின்புறம் கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் அவர்களின் தலையைதுண்டிக்கும் கொடூர காட்சி இடம் பெற்றுள்ளது.

தலை துண்டிப்பு ஈராக்கின் கலாகைதீன் மாகாணத்தில் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த திக்ரிக் நகரை மீட்க ராணுவம் கடுமையாக போரிட்டது. அப்போது பிடிபட்ட ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply