கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்

ராமேசுவரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் அடிக்கடி அவர்களை தாக்கி விரட்டியடித்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.இதனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை மத்திய–மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மாலையில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து 500 விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர்.இங்கு மீன்பிடிக்க வரக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் திரும்ப திரும்ப ஏன் வருகிறீர்கள்? என ஆவேசத்துடன் கூறினர். பின்னர் இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

சில மீனவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் 10–க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து மீன்பிடி சாதனங்களையும் அள்ளி சென்று விட்டனர். இதனால் உயிருக்கு பயந்துபோன ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் கரைக்கு திரும்பினர்.பின்னர் அவர்கள் இதுபற்றி கூறும்போது, இலங்கை கடற்படையினர் தற்போது தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடிக்க தொடங்கி விட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய–மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply