மியான்மரின் மாண்டலே நகரில் தரையிறங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து இன்று அதிகாலை மியான்மருக்கு புறப்பட்ட சோலார் இம்பல்ஸ் விமானம் இன்றிரவு அந்நாட்டின் மாண்டலே நகரில் தரையிறங்கியது. சூரிய சக்தியால் இயங்கும் உலகின் ஒரே விமானமான சோலார் இம்பல்ஸ்௨, ஒரு சொட்டு எரிபொருளை கூட பயன்படுத்தாமல் உலகை சுற்றி வருகிறது. இன்று காலை வாரணாசியிலிருந்து விமானி பர்டினார்ட் பிக்கார்ட் விமானத்தை ஓட்டிச்சென்றார். வாரணாசியிலிருந்து கிளம்பிய விமானம், வங்காள விரிகுடா மற்றும் மிக உயரிய மலைச்சிகரத்தை கடந்து 1400 கி.மீ தூரம் பறந்து மாண்டலேவில் வெற்றிகரமாக தறையிறங்கியது.

முன்னதாக மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு 15 மணி நேரத்தில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் எஸ்.இ.2 வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் பின் அங்கிருந்து மார்ச் 15-ந் தேதி வாரணாசி புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் பயணம் மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வழியாக நேற்று காலை 7.18 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வாரணாசியில் தரையிறங்கியது. இன்று காலை வாரணாசியிலிருந்து புறப்பட்டு மியான்மர் நாட்டிலுள்ள மாண்டலேவுக்கு செல்லும் விமானம், பின்னர் சீனாவில் உள்ள சாங்கிங் மற்றும் நான்ஜிங் ஆகிய இடங்களில் தரையிறங்கும். அதன் பின் அமெரிக்கா செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply