அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் சாவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டாக்டன் நகரில், வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்ட நபர் வாகனத்தில் வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நகர காவல்துறை அதிகாரி ஜோ சில்வா கூறியதாவது:

ஸ்டாக்டன் நகரில், போதைப் பொருள் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படும் பகுதில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

எனவே, இந்த சம்பவமும் அது தொடர்பாக இருக்கலாம் என்றார் அவர்.

இந்தத் தாக்குதலில் அலியா டெய்லர் (20), அர்னிஸ்கா லாஃப்டன் (27) ஆகிய இரு பெண்களும், காபின் கென்னேபிரீவ் (23) என்ற ஆணும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply