ஈராக்கில் வரலாற்று சிறப்பு மிக்க முஸ்லிம்–கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை அழித்த தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு வாழும் கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவினர் மற்றும் குர்து இன மக்களை வெளியேற்றினர். பலரை மதம் மாற்றி வருகின்றனர்.ஈராக்கின் வடக்கு பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலங்களை குண்டு வைத்து தகர்த்து அழித்துள்ளனர்.

இவை 4–ம் நூற்றாண்டில் அசிரியன் மன்னரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களாகும். ஹம்டேனியாவில் உள்ள சிரியாக் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

அதே போன்று ஷியா பிரிவினரின் மசூதியும் தகர்த்து அழிக்கப்பட்டது. இது குறித்த போட்டோக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

எங்களது நாடுகளான சிரியா, ஈராக் மற்றும் லெபனானில், மேற்கத்திய கலாசாரத்தை இறக்குமதி செய்ய நாங்கள் விரும்ப வில்லை. எனவே அழித்து வருகிறோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நாங்கள் அபாய நிலையில் இருக்கிறோம். எங்களின் கலாசாரம் மற்றும் உரிமைகளை பாதுகாத்து தாருங்கள் என உலகநாடுகளை இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஈராக் மொசூல் நகரில் வரலாற்று சிறப்பு மிக்க நூல்நிலையம் மற்றும் அருங்காட்சியகத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply