காட்டுத்தீயாய் பரவும் எபோலா: 3 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க சியாரா லியோன் அதிபர் உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனுக்கு அனைத்து நாடுகளும் பெரு முயற்சி செய்து மருந்துகளையும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்த பிறகும்கூட, கொடிய எபோலா வைரஸை ஒழிக்க முடியவில்லை. காட்டுத்தீ போல் பரவி வரும் எபோலாவை கட்டுப்படுத்தும் வகையில், சியாரா லியோன் அதிபர் எர்னெஸ்ட் கொரோமா 3 நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வருகிற 27-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை இந்த தேசிய அளவிலான முடக்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் வர்த்தகம், வழிபாடு என்று எந்த அன்றாட நிகழ்வும் நடைபெறாது.

பலரது உயிரைக் காவு வாங்கிய எபோலாவால் நாட்டின் பொருளதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அதிபர் கொரோமா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply