ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சுகபோகங்களை அனுபவித்த 1,011 ஊழியர்களுக்கு கல்தா

கடந்த அரசால் முறை­யற்ற வகையில் சம்­பளம் மற்றும் வரப்­பி­ர­சா­தங்­களை வழங்கி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பல்­வேறு பத­வி­களில் அமர்த்­தப்பட்டி­ருந்த 1,011 பேரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தியின காலத்தில் இவ்­வாறு முறை­யற்ற அர­சியல் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டதால், செய­ல­கத்தின் ஊழியர் எண்­ணிக்கை 1,565 ஆக அதி­க­ரித்து மேல­தி­க­மாக ஊழி­யர்கள் இருந்­த­தாக செய­லக பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக இந்த அர­சியல் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சம்­பளம், எரி­பொருள், வாகனம், தொலை­பேசி ஆகிய பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுத்­ததால் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் செலவு வரை­மு­றை­யற்று அதி­க­ரித்­தி­ருந்­தது. தற்­போ­தைய ஜனா­தி­பதி இந்த ஊழியர் எண்­ணிக்­கையை 554 வரையில் குறைத்துள்ளார்.

இதனால் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply