நான் மகிழ்ச்சியாக உள்ளேன் – இந்தியாவுக்கு திரும்பபோவது இல்லை: ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மும்பை வாலிபர் பேச்சு
மும்பையில் இருந்து ஈராக் சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்தியாவுக்கு திரும்பி வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், ஐ.ஸ்.தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஈராக் சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன், 4 பேரில் ஒருவரான ஷேக் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போன் மற்றும் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
இவர் தற்போது சிரியாவின் ரக்கா பகுதியில் உள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பினர் ஷேக்கின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவருடன் பேசி உள்ளார்கள். அப்போது தான் நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தியாவுக்கு திரும்ப வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார். அவருடன் சென்ற சஹிம் டாங்கி என்பவர் சண்டையில் இறந்து விட்டதாக கூறப்பட்டு வந்த தகவலையும் ஷேக் உறுதிப்படுத்தியுள்ளார்.
4 பேரில் ஒருவரான ஆரீப் மஜீத் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைள் பிடிக்காமல் கடந்த நவம்பரில் நாடு திரும்பிவிட்டார். குறிப்பாக பெண்களை கட்டாயப்படுத்தி ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, கட்டாய உடலுறவு என மிக மோசமாக நடத்துவது பிடிக்காமல் வந்துவிட்டதாக தெரிவித்த அவர், தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளார். ஆரீப் மஜீத் மற்றும் ஷேக் ஆகிய இருவரின் தந்தைகளும் மருத்துவர்கள் என்பதும், ஷேக் என்ஜினீயரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply