இன்று விவசாயிகளுடன் வானொலி மூலம் உரையாடுகிறார் மோடி
பிரதமர் மோடி இன்று விவசாயிகளுடன் வானொலி மூலம் உரையாடுகிறார். நிலம் கையகபடுத்தும் சட்டம் கடும் எதிர்ப்பை சந்தித்து இருக்கும் சூழலில் மோடியின் இந்த உரை முக்கியத்தவம் வாயந்ததாக கருதப்படுகிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதம் ஒரு முறை அகில இந்திய வானொலி மூலமாக மக்களுடன் உரையாடி வருகிறார். இதில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது அவருடன் இணைந்து பிரதமர் மோடி ஆற்றிய உரை. வானொலி மூலம் இந்திய மக்களுடன் நேரடியாக பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக ஒபாமா தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை சமூகத்தின் பொறுப்பாக உள்ளது என்றும் இன்றைய உலகை இளைஞர்கள் ஒருங்கிணைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியது அதிக வரவேற்பை பெற்றது. போதை பொருட்களால் இளைய தலைமுறை சீரழிந்து வருவதாகவும், இதனை தடுத்த நிறுத்த வேண்டியது அனைவரது கடமை என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள், மோடியின் போதை ஒழிப்பு வானொலி உரை பயனுள்ளதாக இருந்ததாக கூறினர்
இதற்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்பட்ட உரை அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பிரதமர் ஆற்றிய உரை. 12ம் வகுப்பு மாணவர்கள், தேர்வை எண்ணி அச்சப்படாமல், பதற்றமின்றி தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply