31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார்
சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply