சரத் பொன்சேகாவுக்கு “ஃபீல்டு மார்ஷல்’ பட்டம்
இலங்கையின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராணுவத்தின் மிக உயரிய “ஃபீல்டு மார்ஷல்’ கெளரவப் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 2009-இல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கை ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர் பொன்சேகா. ராஜபட்சவுக்கு எதிராக 2010-இல் அதிபர் தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டுத் தோல்வியுற்ற பின்னர், தேசத் துரோகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஃபீல்டு மார்ஷல் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply