100 நாள் திட்டத்தின் முடிவில் வடக்கிலேயே புதிய நாடொன்று உருவாக போகின்றது என்பது உறுதி : விமல் வீரவன்ச

கொழும்பு ஜயந்திபுரவிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உரையாற்றுகையில், புதிய அரசாங்கம் உருவான நாள் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில், சம்பந்தன் போன்றவர்களினுடைய தேவைக்காகவே செயற்பட்டு வருகின்றார்.ரணிலுக்கு ஆட்சிப்பொறுப்பை வழங்கி அவருக்கு நன்றிக்கடன் செலுத்திவிட்டார். எஞ்சியுள்ள சம்பந்தன் போன்றவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியுள்ள காரணத்தினாலேயே வடக்கில் 200 ஏக்கருக்கும் அதிகமான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அதி உயர்பாதுகாப்பு வலயத்தினை நீக்கி அக்காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள காரணத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவ்வாறு அச்சுறுத்தலை பொருட்படுத்தாது சம்பந்தனுக்கும் கைமாறு செய்து விட்டார். அதனை பகிர்ந்தளிக்கவே ரணிலும் மைத்திரியும் வடக்கிற்கு செல்லவுள்ளதாகவே கூறிவருகின்றனர். ஆகவே 100 நாள் திட்டத்தின் முடிவில் வடக்கிலேயே புதிய நாடொன்று உருவாக போகின்றது என்பது உறுதி என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply