திருச்சி முகாம் சிறையில் உள்ள 5 இலங்கை தமிழர்கள் விடுதலை

திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 24 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று அதற்கான உத்தரவு அரசு அதிகாரிகள் மூலம் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனியிடம் வழங்கப்படுகிறது.

பின்னர் மத்திய சிறையில் உள்ள இலங்கை தமிழர்களில் 5 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களை அழைத்து செல்ல வந்துள்ள உறவினர்கள் திருச்சி மத்திய சிறை முன்பு குவிந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply