இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை : மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. இலங்கை கடற்பிரதேசத்திற்கு அனுமதியின்றி நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள்.மீனவர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் கலந்துரையாடினோம். இலங்கை கடற்பிரதேசத்தில்  மீன் பிடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு இடமளிக்கமுடியாது என நான் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளேன். அரசாங்கம் அதற்கு இடமளிக்காது. வடக்கு மீனவர்களுக்கு இந்த கடற்பிரதேசம் மிகவும் முக்கியம். என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply