வெசாக் தினத்துக்கு பின்னர் பாராளுமன்றம் கலைப்பு : ஜூன் இறுதிப்பகுதியில் தேர்தல் ?

எதிர்வரும் மே மாதம்   முற்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு   ஜூன் மாதம் இறுதிப் பகுதியில்  பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும்  வெசாக் போயா தினத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும்    பாராளுமன்றத் தேர்தலானது தற்போதைய விகிதாசார முறையிலேயே நடைபெறும் என்றும்  அரசாங்க  தரப்பிலிருந்து தெரியவருகின்றது. 
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையிலேயே எதிர்வரும் மே மாதம் வெசாக் போயா தினத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து    தேர்தலை ஜூன் மாதம் இறுதியில் நடத்துவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றிய பின்னர்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என   தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு  முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் வராது என்றும்     தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான   ஆரம்பகட்ட நடவடிக்கைககள் மட்டுமே   தேர்தலுக்கு  முன்னர் எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஐககிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள்  விடுதலை முன்னணி மலையக கட்சிகள்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள்  பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply