அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – இருவர் படுகாயம்
அமெரிக்காவின் போர்ட் மேடெவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையம் கொண்ட அம்மையத்திற்குள் நுழைய இரு சந்தேக நபர்கள் முயன்றனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானர். 20 வயதை எட்டிய மற்றோரு நபர், குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் காவல்துறை தரப்பில் காயமடைந்த 40 வயது அதிகாரிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் இருவரும், பெண்கள் அணியும் உடையணிந்து, திருடப்பட்ட போர்டு எஸ்கேப் எஸ்.யூ.வி. கார் மூலம் வந்துள்ளனர்.
எதற்காக சந்தேக நபர்கள், பெண்கள் போல் உடையணிந்து வந்தார்கள் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதல் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், இது உள்ளூர் குற்ற வழக்கு. இதை தீவிரவாத சம்பவமாக பார்க்கக்கூடாது என கூறினர். இருவரும் வந்த வாகனத்தில் இருந்து, ஏராளமான போதை பொருட்களும், ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply