22 மணி நேர பயணத்திற்கு பின் சோலார் இம்பல்ஸ்-2 விமானம் சீனாவில் தரையிறங்கியது
மியான்மர் நாட்டில் உள்ள மாண்டலே நகரிலிருந்து நேற்று அதிகாலை புறப்பட்ட சோலார் இம்பல்ஸ்௨ விமானம், 22 மணி நேர பயணத்திற்கு பின் இன்று அதிகாலை 1:35 மணியளவில் சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் தரையிறங்கியது. முற்றிலும் சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் இவ்விமானம் இன்று சீனாவில் தரையிறங்கியதன் மூலம், தனது 5வது கட்ட பயணத்தை நிறைவு செய்தது. சில மணி நேரங்கள் மட்டுமே சாங்கிங்கில் நிற்கும் விமானம், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அந்நாட்டு தலைநகர் ஷாங்காயிலிருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள நான்ஜிங் நகரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சில நாட்கள் தாமதமாக சாங்கிங்கில் இருந்து விமானம் நான்ஜிங்கிற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பொறியாளரான மைக்கேல் ஆங்கர் இத்திட்டத்தின் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ‘நாங்கள் களைப்படைந்துள்ளோம். அதே சமயம் சாங்கிங்கிற்கு வந்து சேர்ந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார். இன்றைய பயணத்தின்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு ௨0 டிகிரி செல்சியஸ் குளிரை தாங்கி கொண்டு, சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் உயர்ந்த மலைகளை விமானி கடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply