சகோதரரின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால
தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதியின் சகோதாரர் பிரியந்த சிறிசேன, கடந்த வாரம் நண்பர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமானார். இதன்போது ஜனாதிபதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த விஜயம் மார்ச் 28ம் திகதி முடிவடைந்தது. எனினும் நேற்று மாலை சகோதரரின் இறுதிக்கிரியை பொலநறுவையில் இடம்பெறும் வரையில் அவர் நாடு திரும்பவில்லை.எனினும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட ஜனாதிபதியுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் நாடு திரும்பிவிட்டனர்.
ஏற்கனவே 2012ம் ஆண்டு ஒக்டோபரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்கு ஊறு விளைவிக்கும் தமது சகோதரரை பிணையில் எடுக்கமுடியாதபடி கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமையும் யாவரும் அறிந்ததே.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply