விண்வெளியில் சூரிய மின் உற்பத்தி மையம்: சீனாவின் புதுமை திட்டம்

விண்வெளியில் பிரம்மாண்டமான சூரிய மின் உற்பத்தி மையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த சூரிய மின் உற்பத்தி மையத்தின் மூலம் அதிக அளவு மின் சக்தி கிடைப்பதுடன் பூமி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. பூமியை சுற்றி வருவதுபோல அமைக்கப்படும் இந்த மையத்தில் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி தகடுகள் இருக்கும்.

இங்கு கிடைக்கும் மின்சாரம் மைக்ரோவேவ் அல்லது லேசராக மாற்றப்பட்டு பூமியில் உள்ள மின் பகிர்மான மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவ் 1941-ம் ஆண்டு எழுதிய நாவலில், வானத்தில் சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவ தாக கற்பனையாக கூறியிருந் தார். இப்போது அதனை உண்மை யாக்கும் முயற்சியில் சீனா களமிறங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply