ஐரோப்பாவில் சூறைக் காற்று வீசியதில் நான்கு பேர் பலி
ஜெர்மனி, ஆஸ்த்ரியா, நெதர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீசிய சூறைக் காற்றினால் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.காரின் மீது மரம் விழுந்ததில் கொல்லப்பட்ட இருவர் உட்பட, ஜெர்மனியில் மூன்று பேர் இதனால் கொல்லப்பட்டனர். ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மியூனிக் நகரின் பிரதான ரயில் நிலையம் காலிசெய்யப்பட்டது.ஆஸ்த்ரியாவில் ஒருவர் ஏணி மீதிருந்து விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.நெதர்லாந்து முழுக்க, இந்த சூறைக் காற்றினால் சாலைகளில் லாரிகள் கவிழ்ந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது.பிர்மிங்கமில் கார் மீது மரம் விழுந்ததில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஜெர்மனியிலேயே மிக உயரமான மலையான ஜக்ஸ்பைட்ஸ் மலை மீது மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.நிக்லாஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சூறைக்காற்று மேற்கு திசையிலிருந்து ஜெர்மனி முழுக்க வீசியது. லோயர் சாஸ்கோனி, நார்த் ரைன் – வெஸ்ட்ஃபாலியா ஆகிய பகுதிகளில் பிராந்திய சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.க்ராஸ் சாண்டெர்ஸ்லெபன் என்ற இடத்தில் கான்க்ரீட் சுவர் இடிந்து ஒருவர் தலை மீது விழுந்ததில், அவர் மரணமடைந்தார்.
ஃப்ராங்ஃபர்ட், ஹம்பர்க், மியூனிக் ஆகிய இடங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply