பிரித்தானியாவில் இருந்து முல்லைத்தீவை நோக்கி பயணமாகும் மருத்துவக் கப்பல் : ‘வணங்கா மண்”
“வன்னி மக்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேர்த்துக் கொண்டு, கப்பலில் வன்னிக்குச் செல்வதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது. பிரித்தானிய துறைமுகமொன்றில் இருந்து இன்னமும் இரு வாரங்களில் புறப்படவிருக்கும் இக்கப்பலில், மருத்துவர்கள், மனிதாபிமானப் பணியாளர்களுடன் ஊடகவியலாளர்களும் செல்லவிருக்கிறார்கள். தமிழ் மருத்துவர்கள் மட்டுமல்லாமல், பிறவினங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் இக்கப்பலில் செல்லுவதற்கு முன்வந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. ஏற்கனவே நான்கு நோர்வீஜிய சத்திரசிகிச்சை நிபுணர்களும, ஆறு கனேடிய மருத்துவர்களும் இக்குழுவினருடன் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அரசியல் பிரமுகர்களும் இம்முயற்சிக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடுத்த வினாடி உயிர் வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், உணவுக்கும் உறைவிடத்திற்கும் அல்லல் பட்டுக்கொண்டு, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டபடி எங்கள் மக்கள் அவதிப்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் நிலைகுலைந்து போகவில்லை, யாருக்கும் மண்டியிடவும் தயாராகவில்லை. அந்த உறவுகளுக்கு உதவிடும் பொறுப்பினையேற்று, புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முயற்சியே “வணங்கா மண்” என்ற பெயரிடப்பட்டுள்ள மனிதாபிமானப் பணி.“ இவ்வாறு புலிகளின் ஆதரவு ஊடகங்களால் பெருமெடுப்பில் முல்லைத்தீவுக்கு கப்பல் அனுப்ப எடுக்கும் `மனிதாபிமானப் பணிக்கு` பின்னால் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் என்ன?
இன்னும் சில வாரங்களில் புலிகளின் கடைசி இருப்பையும் கேள்விக்குள்ளாகும் இறுதி இராணுவ நெருக்கடியை தவிர்க்க, சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்களை முல்லைத்தீவு கடற் பிராந்தியத்துக்கு அழைத்து `மும்பாய் சம்பவம்` போல் 24மணி நேர `லைவ் கவரேச்` கொடுத்து பரபரப்பை உருவாக்குவதே புலிகள் இறுதி விரும்பம்.
அத்துடன் அந்த சந்தடிசாட்டில், வாய்ப்புகள் கிடைத்தால் புலிகளின் தலைவரையும் தளபதிகளையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாப்பாக முல்லைத்தீவில் இருந்து மீட்டெடுக்கும் புலிகளின் திரைமறை நிகழ்ச்சி நிரலே `ஒப்பிரேசன் வணங்கா மண்`.
அண்மைக் காலத்தில் நடந்த சண்டையொன்றில் புலிகளின் சில முக்கிய மூத்த தலைவர்கள் படுமோசமான காயத்துக்குள்ளாதாகவும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவே `வணங்கா மண்` முல்லைத்தீவு போவதாக பிறிதொரு தகவல் புலி வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் `வணங்கா மண்` கப்பல் பிரயாணம் செய்வதில் அதிக சட்ட சிக்கலோ பாதுகாப்பு பிரச்சினையோ எழ வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட கடற்பிரதேசத்துக்குள் நுழையுமுன் எந்தவொரு கப்பலும் முன்னனுமதி பெறவேண்டும். அல்லாத பட்சத்தில், இலங்கை கடற்படையால், `வணங்கா மண்` என்ற பெயரிடப்பட்டுள்ள மனிதாபிமானப் பணி, இலங்கையின் கடல் எல்லையில் தடுத்து நிறுத்தப்படும். மீற முனைந்தால் விளைவுகள் மோசமாகும் என்பதை `விளங்கா மண்` புலி வாலாக்கள் புரியவில்லை என்பதை விட, ஒரு விபரீத நிகழ்வை விருப்பியே `வணங்க மண்` முல்லைத்தீவு போகிறது.
முல்லைத்தீவில் யுத்த சூனிய பிரதேசத்தில் புலிகளால் அடாத்தாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 ஆயிரம் மக்களின் உயிரை பணம் வைத்து புலிகள் புதிய அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றும் முயற்சியே பிரித்தானியாவில் இருந்து முல்லைத்தீவை நோக்கி பயணமாகும் உணவுக்கப்பல் : ‘வணங்கா மண்.“
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திResponses are currently closed, but you can trackback from your own site.