126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இந்தியா
பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு நடுத்தர வகையை சேர்ந்த 126 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாஸ்சால்ட் விமான தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் புதிதாக 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்படவிருப்பதால், 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் ராபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான எல்லா விஷயங்களும் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் பிரான்சிடம் பறக்க தயாராக இருக்கும் 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கப்படும் என அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply