இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது தவறு : வி.கே.சிங்

கடந்த 1987ம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது, உயர்நிலை கொள்கை ரீதியிலான தோல்வியாகும் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் இராணுவத் தலைமை தளபதியுமான வி.கே.சிங் கூறினார். இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், “தைரியமும், தண்டனையும்´ என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சண்டையில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது, கொள்கை ரீதியில் தோல்வியாகும். அதனால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பல்வேறு காரணங்களால், இந்தத் தோல்வி ஏற்பட்டது. இந்திய இராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல், போரில் சிக்கிக்கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply