தந்தையை கொன்ற மகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பொலன்­ன­றுவை, புதிய நகர பிர­தே­சத்தின் கனன்­கொல்­லையில் தந்­தை­யொ­ருவர் அவ­ரது மகனின் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி உயி­ரி­ழந்­துள்ளார். இச்­சம்­பவம் நேற்று காலை இடம்­பெற்­ற­தா­கவும் கூரிய ஆயுதம் ஒன்றை பயன்­ப­டுத்தி தந்­தை­யை கொலை செய்­து­விட்டு தப்பிச் சென்ற மகன் வெலிக்­கந்தை பிர­தே­சத்தில் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

பொலன்­ன­றுவைஇ கனன்­கொல்ல பிர­தே­சத்தில் 58 வய­தான நபர் ஒரு­வ­ருக்கும் அவ­ரது 21 வய­தான மக­னுக்­கு­மி­டையே நேற்று காலை வாக்கு வாதம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.

வாக்குவாதம் முற்­றவே கூரிய ஆயுதம் ஒன்­றினை கையி­லெ­டுத்­துள்ள மகன் தனது தந்தை மீது சர­ம­ாரி­யான தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளான். இதன் கார­ண­மாக தந்தை ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார். தந்தை உயி­ரி­ழந்­ததை தொடர்ந்து கொலை சந்­தேக நப­ரான மகன் ஊரை விட்டு தப்­பி­யோ­டி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் நேற்று பிற்­பகல் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி கொலை தொடர்பில் ஸ்தலத்திற்கு சென்று பார்­வை­யிட்ட பின்னர் சந்­தேக நபரை கைது செய்ய பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார். இந் நிலையில் தந்­தையின் சட­ல­மா­னது பொலன்­ன­றுவை போதனா வைத்­தி­ய­சா­லையில் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply