யாழ். தொடரூந்துப் பாதை மீளமைப்புப் பணிகள் ஆரம்பம்

கடந்த 23 வருடங்களாக செயற் படாதிருந்த வவுனியா – காங்கேசன்துறைக்கான தொடரூந்துச் சேவையினை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்குடன் அதற்கான பாதையினை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டில் வன்முறைகள் ஆரம்பித்தமையைத் தொடர்ந்து 1986 ம் ஆண்டு முதல் கொழும்பு – காங்கேசன்துறை ஆகிய நகரங்களுக்கு இடையிலான யாழ் தேவி தொடரூந்துச் சேவை வவுனியாவுடன் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அரசபடைகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்னி மீட்பு பணிகள் வெற்றியடைந்துள்ள நிலையில், அண்மையில் வவுனியாவில் இருந்து யாழ் குடாநாட்டிற்கான ஏ-9 பாதை திறக்கப்பட்டு, அதனூடாக யாழ்ப்பாணத்திற்கு லொறிகள்மூலம் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன். யாழ் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களான 48 ஆயிரம் கிலோ சின்ன வெங்காயம் 36 ஆயிரம் கிலோ இறால் வகைகள் கொழும்பு வந்தன.

கொழும்பு – காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையினையும் விரிவுபடுத்தும் மேற்படி பணியினை பூர்த்தி செய்வதற்கான மொத்த செலவாக 5 பில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply