ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாதுகாப்பாக உள்ளது: அமெரிக்கா
ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாக சொல்லப்பட்ட ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். நேற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்துள்ள அமெரிக்கா, சுத்திகரிப்பு ஆலையின் வெளிப்பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், ஆனால் ஆலையின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அந்த பகுதியில் 8 முறை கடுமையான வான்வழி தாக்குதலில் அமெரிக்க விமானபடை ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் வடக்கு பகுதியில் பிய்ஜி நகரத்தில் உள்ள அந்த நாட்டின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து பல முறை முயற்சித்து வந்த போதிலும், இப்போதுதான் முதல் முறையாக கடும் பாதுகாப்பையும் மீறி ஆலையின் வெளிப்பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆலையில் ஒரு நாளில் சராசரியாக 3 லட்சம் பாரல் எண்ணெய் சுத்தகரிக்கப்படுகிறது. இது அந்த நாட்டின் மொத்த தேவையில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply