தமிழருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் சந்தர்ப்பம் இருந்தும் மறுக்கப்படுகின்றது :அரியநேத்திரன்

பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க் கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சனை நிலவுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் வழங்குவது தொடர்பில் பல முரண்பட்ட கருத்துக்களும் வந்த வண்ணமுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.தற்போதைய நிலமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் தமிழர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அவரிடம் வினவியபோதே மேறகண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு என்பது வழுக்குமரத்தில் ஏறுவது போன்று இன்னும் எட்டப் படாமலுள்ளது. இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்காக வேண்டி தமிழ் மக்கள் பல இழப்புக்களை தொடர்ந்தும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றார்களே தவிர இன்னும் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த 65 வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பணியும் உயர்வதும், தாழ்வதுமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியினை மேற்கொள்ள வேண்டுமாயின் எமது தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ் தமிழ் தேசியத்தின் பால் அணிதிரள வேண்டும். அவ்வாறு அணிதிரளும் பட்சத்தில் அது தமிழர்களுக்குரிய தீர்வுக்கு வழிவகுக்கும்.

தற்போது பாராளுமன்றத்தில் நிலவுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் பிரச்சனை ஒரு இன முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. , தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக வரக்கூடாது என்ற விதத்தில் செயற்பாடுகள்; இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் தருவதற்கு பல முரண்பட்ட கருத்துக்களும் வந்த வண்ணமுள்ளன.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி , ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி. பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 4 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளே 225 உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த 4 கட்சிகளின் தலைவர்களில் ஒருவரே எதிர் கட்சித் தலைவராக வரமுடியும். அந்த வகையில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் தமிழர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற சிறப்புரிமையினையும், இனவாதம் என்கின்ற சக்தி தடுக்கின்றது. சபாநாயகரினால் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியாமலுள்ளது. இச்செயற்பாடுகள் பாராளுமன்ற நடைமுறைக்கு இல்லாத விடயங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே இவற்றை தமிழ் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் கலை, கலாசராம், பண்பாட்டு விடையங்களை பேணி வருவது போன்று எமது இனம், நிலம் சார்ந்த விடையங்களிலும் அதிக அக்கறையுடனான ஈடுபாட்டை மேலோங்கச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்னுமொரு இனத்தின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழவேண்டி ஏற்பட்டுவிடும்.

கிழக்கு மாகாணத்திலே 41.53 வீதமானர்கள் தமிழர்கள் இருக்கின்றார்கள், 39.39 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களும், அடுத்த நிலையில் சிங்கள மக்களும் உள்ளார்கள்.

ஆனால் கிழக்கில் 41 வீதமான மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களும், 39 சத வீதமானர்கள் தமிழ் மாணவர்களும், இவற்றினைவிடக் குறைவாக சிங்கள மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.

இவற்றினைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள், இருந்தாலும் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைந்து கொண்டு செல்கின்றது. இவற்றில் எமது சமூக மட்ட அமைப்புக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் இராணுவ மயமாக்கல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் இடமபெற்று வருகின்றன. குறிப்பாக பட்டிப்பளைப் பிரதேசத்தின் கெவுளியாமடு போன்ற பகுதிகளிலே இவை இடம்பெற்று வருகின்றன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட்டிருக்கின்றது. என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply