பாகிஸ்தானில் தகர்க்கப்பட்ட இந்து கோவிலை மீண்டும் கட்டித்தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள டேரி கிராமத்தில், பரமஹன்ஸ் ஜி மகாராஜ் என்ற சாமியார், இறந்து, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டிருந்தது. அந்த கோவிலுக்கு சாமியாரின் பக்தர்கள் 1997-ம் ஆண்டு வரை சென்று வழிபட்டு வந்தனர். ஆனால் அந்த கோவிலை சிலர் தகர்த்து விட்டனர். அதை பக்தர்கள் மீண்டும் கட்ட முயற்சித்தபோது, உள்ளூர் மதவாதிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டை பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் குமார் வாங்க்வானி நாடினார். அவர் தாக்கல் செய்த வழக்கை தலைமை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான அமர்வு விசாரித்து, இடிக்கப்பட்ட இந்து கோவிலை மீண்டும் கட்டித்தருமாறு கைபர் பக்துங்வா மாகாண அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இது பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்து மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply