ரணிலின் எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகள் : குருவாயூரில் வழிபாடு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந் துள்ள குருவாயூர் ஆலயத்தில், தனது எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகளைக் கொடுத்து, வழி பாடு செய்துள்ளார். நேற்றுக் காலை விமானம் மூலம், மனைவி மைத்ரியுடன் கொச்சினை சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து குருவாயூர் ஆலயத்திற்கு காலை 11.15 மணியளவில் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.இதன்போது, ரணில் விக்கிரமசிங்க தனது எடைக்கு இணையாக- 8.45 இலட் சம் ரூபா பெறுமதியான 77 கிலோ சந்தனக் கட்டைகளை துலாபாரமாக கொடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனும், ரணில் விக்கிரமசிங்கவுடன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து மமியூர் மகாதேவா ஆலயத்திலும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வழிபாடு களை மேற்கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, குருவாயூரில் வழிபாடுகளை முடித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரணில், தான் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ சார்பான வன் அல்ல என்றும், இலங்கையின் நலன் களை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு பிரத மராகவே இருப்பதாகவும், தெரிவித்துள் ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply