அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விஜயம்

வட மாகாண விஷேட செயலணித் தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வன்னிப் பிராந்தியத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு வவுனியா சென்றுள்ளார். தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வந்து வவுனியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் அப்பிரதேசத்தில் மக்கள் நலத்திட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்லும் முகமாகவும் அமைச்சரின் பயணம் அமையவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் நலன்கள் தேவைகள் தொடர்பாக தொடர்ச்சியான கோரிக்கைகள் அரச அதிகாரிகளினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் பொது மக்களினாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தொடர்ச்சியாக தெரியப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா சென்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply