19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்

அர­சி­ய­ல­மைப்பின் பத்­தொன்­ப­தா­வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. இத்­தி­ருத்­தத்தை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு சபா­நா­யகர் தீர்­மானம் எடுத்து விட்டார் என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

19 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­பட்டு அது நிச்­சயம் நிறை­வேற்­றப்­படும். இவ் விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

அத்­தோடு சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ கட்சித் தலை­வர்­க­ளுடன் பல சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினார். அப் பேச்­சு­வார்த்­தை­களின் போது 19 ஆவது திருத்தம் தொடர்­பான விவா­தத்தை நடத்­து­வ­தற்கு இணக்­கப்­பாடு காணப்­பட்­டது.

அத்­தோடு 19 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும். நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­திக்கு உள்ள சர்­வா­தி­கார அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்­கா­கவே இந்த திருத்தம் கொண்டு வரப்­ப­டு­கி­றது.கடந்த காலத்தில் ஆட்­சி­யா­ளர்கள் தமது அதி­கா­ரங்­களை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கும் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­குமே திருத்­தங்­களை நிறை­வேற்­றி­னார்கள்.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கு திருத்­தங்­களை கொண்டு வரு­கிறார்.ஜனா­தி­பதித் தேர்­தலின் போது நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தாக மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கினோம்.

அதற்­க­மைய 19 ஆவது கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம்.நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் 19க்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply