‘மனிதக் கேடயம்’ குறித்து தெரிய உலக நாடுகள் சுயமாகவும் நேரடியாகவும் வன்னி வந்து அறிந்து அளவிட வேண்டும்
”நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக் கொள்ளப்பட்டதுமான, இலங்கைத் தீவின் இனச் சிக்கலுக்கு இத்தகையதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்” என்றார் புலிகளின் தலைமையினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள `பன்னாட்டு உறவுச் செயலுர உரித்தாளர்` செல்வராசா பத்மநாதன். வெள்ளியன்று அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்ரன் விடுத்த அறிக்கை குறித்து தமிழ்நெற் அவரின் கருத்தை கேட்டறிந்து செய்தி வெளியிட்டிருந்தது.
“உடனடியான போர்நிறுத்தம் என்பது பொது மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களால் மேலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்” என்றார் திரு. பத்மநாதன் .
“இலங்கையின் எல்லா இனக்குழுக்களதும் எதிர்பார்ப்புகளை சந்திக்கும் வகையிலான தீர்வொன்றை உருவாக்க முனைகையில், கடுந்துயர் ஒரு புறமும் பேராசை மறுபுறமும் இருப்பதை முறை வழுவாமல் எடை போட்டுக் கொள்ள வேண்டும்” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
‘எல்லா இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்திசையவேண்டும்’ என்பது ஒற்றையாட்சி சூழ்ந்த சிறிலங்கா அரசமைப்பின் அணுகுமுறை. தமிழ்த் தேசிய எதிர்பார்ப்புக்களை மறுதலிக்கவே இந்த அணுகுமுறை கையாளப்பட்டிருப்பதற்கு வரலாறு உண்டு என்று குறிப்பிட்டார் பத்மநாதன்.
போர் சூழலில் புலிகளால் பயன்படுத்தும் ‘மனிதக் கேடயம்’ தொடர்பான கேள்வி குறித்துப் பேசுகையில், வன்னிப் பொது மக்கள் இக்கேள்வி குறித்து உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் சுயமாகவும் நேரடியாகவும் அறிந்து அளவிட வேண்டும் என்பதை தான் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
ஹிலாரி கிளின்ரன் தேர்தல் காலத்தில் கூறியதற்கு அமைய, இலங்கைத் தீவின் சிக்கல் குறித்து ஆர்வம் எடுத்துக் கொள்வதற்காக அவருக்குத் தனிப்பட்ட நன்றி தெரிவித்த பத்மநாதன், பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதும், புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு வலியுறுத்தாது விட்டிருப்பதும் முக்கிய அணுகுமுறை மாற்றம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply