இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்படவேண்டும்:அமைச்சர் பிரணாப் முகர்ஜி
வடக்கில், தொடரும் மோதல்கள் காரணமாக இடையில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அதேவேளை இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக ஒருபோதும் தீர்வு காணமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடில்லியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்கள் இடையில் சிக்குண்டு போயுள்ளனர். இது தொடர்பி நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.
இலங்கை இனப்பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது. அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும். நான் இலங்கைக்கு பல தடவை விஜயம் செய்து அங்கு நீண்டநேரம் அரசியல் தலைவர்களுடன் நடத்தியுள்ளேன் இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் எடுத்துக் கூறியுள்ளேன்.
இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்நிர்மானபணிகளுக்கு இந்திய அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply