இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாக ராணுவத்துக்கு செலவிடும் சீனா: அமெரிக்கா தகவல்

கடந்த ஆண்டு, இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாக சீனா தனது ராணுவத்துக்கு செலவிட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்‘ தாக்கல் செய்த ஆண்டறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் ராணுவ பட்ஜெட் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 840 கோடியாக இருந்தது. ஆனால், சீனாவின் ராணுவ பட்ஜெட் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 60 கோடியாக இருந்தது. இது, இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.கடந்த பல ஆண்டுகளாகவே, சீனா தனது ராணுவத்துக்கு ஒதுக்கும் தொகையை அதிகரித்து வருவதாகவும், தற்போது அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இத்தொகை உயர்ந்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் ‘பென்டகன்‘ கூறியுள்ளது. மேலும், அதிநவீன ஆயுத தளவாட தொழிற்சாலையை சீனா உருவாக்கி இருப்பதாகவும், சீனாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply