ஜெ.க்கு ஜெயில் தண்டனையா? விடுதலையா? ‘அப்பீல்’ வழக்கில் இன்னும் சில மணிநேரத்தில் தீர்ப்பு…
சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்னும் சில மணிநேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க இருக்கிறார். ஜெயலலிதாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு இது என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கர்நாடகா உயர்நீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1991௯6ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மாதம் ரூ1 ஊதியம் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் இந்த பதவி காலத்தில் வருமானத்துக்கும் அதிகமாக ரூ66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. Jஅய இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி, ஜெயலலிதா, சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் இதர மூவருக்கும் தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனிபெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்தார். மொத்தம் 41 நாட்கள் விசாரணை நடத்திய நீதிபதி குமாரசாமி தீர்ப்பை இன்று முற்பகல் 11 மணிக்கு வழங்க உள்ளார். இம் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் பவானிசிங். ஆனால் வழக்கை நடத்துகிற கர்நாடகா அரசால் பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படவில்லை. தமிழக அரசுதான் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இதனை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் ஆகியோர் தங்களது தரப்பு வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த வாதங்களைக் கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு, அன்பழகன் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்களை குற்றவாளிகளுக்கு எதிரான அரசு தரப்பு வாதமாக எடுத்துக் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க இருக்கிறார்.
ஜெயலலிதாவின் எதிர்கால அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் தீர்ப்பு என்பதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்யும். அபராதம், சிறை தண்டனை அதிகபட்சம் என, உயர் நீதிமன்றம் கருதினால், தண்டனையையும், அபராதத்தையும் குறைக்கலாம். தண்டனை உறுதி செய்யப்பட்டாலோ, குறைக்கப்பட்டாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள் தனி நீதிமன்றத்தில் சரணடையும்படி குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடும். உயர் நீதிமன்றம் குறிப்பிடும் நாட்களுக்குள், குற்றவாளிகள் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். 144 தடை உத்தரவு- பலத்த பாதுகாப்பு இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கர்நாடக உயர் நீதிமன்றப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கப்பன் பூங்காவின் மையப் பகுதியில் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம், அரசுத் துறை அலுவலகங்கள், சின்னசாமி கிரிக்கெட் மைதானம், ஆளுநர் மாளிகை போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply